Tuesday, April 3, 2012

பீட்ரூட் கட்லெட்





தேவையான பொருட்கள்:
எண்ணெய் - மூன்று ஸ்பூன் 
சீரகம் (அ) சோம்பு (அ) ஓமம் - சிறிது (சுவைக்கேற்ப )
மெலிதாக துருவிய பீட் ரூட் - இரண்டு கப் 
பெரிய வெங்காயம் - பொடியாக நறுக்கியது - அரை கப்
பொடியாக நறுக்கிய தக்காளி - இரண்டு ஸ்பூன் 
இஞ்சி பூண்டு விழுது - ஒரு டேபிள் ஸ்பூன் 
கரம் மசாலா தூள் - ஒரு ஸ்பூன்
மிளகாய் தூள் , மல்லி தூள் - தலா அரை ஸ்பூன் 
வேகவைத்து மசித்த உருளை கிழங்கு - ஒரு கப்
உப்பு தேவையான அளவு
பொடிதாக அரிந்த மல்லிதழை - ஒரு கைப்பிடி
எலுமிச்சை சாறு - ஒரு ஸ்பூன் 
காய்ந்த பிரட் தூள் - நான்கு ஸ்பூன்

செய்முறை:
  1. அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் ஓமம், வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.
  2. துருவிய பீட் ரூட் சேர்த்து வதக்கி , மூடி போட்டு மிதமான தீயில் பீட் ரூட்டை பச்சை வாடை போகும் வரை வேக விடவும். தண்ணீர் சேர்க்க தேவை இல்லை.
  3. மசாலா பொடிகள் சேர்த்து ஐந்து  நிமிடம் வதக்கவும். தேவைபட்டால் தண்ணீர் தெளித்து கொள்ளலாம். 
  4. மசித்த உருளை கிழங்கு, மல்லிதழை,  எலுமிச்சை சாறு சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.
  5. இந்த கலவையை நன்கு ஆறியதும் , ஒரே அளவிலான உருண்டைகள் பிடித்து வடைபோல் தட்டி, பிரட் தூளில் பிரட்டி எடுத்து வைத்து கொள்ளவும்.
  6. அடுப்பில் தோசை கல் வைத்து, லேசாக எண்ணை விட்டு கட்லெட் இருபுறமும் பொன்னிறமாகும் வரை சுட்டு எடுக்கவும்.
  7. சாதம் வகைகளுக்கு தொட்டு கொள்ளலாம். மாலை சிற்றுண்டியாகவும் பரிமாறலாம்.  

Related Posts Plugin for WordPress, Blogger...