Friday, March 18, 2011

மிளகு காளான் / பெப்பர் மஸ்ரூம்

எங்க செட்டியாருக்கு (காரைக்குடி பக்கம் கணவரை இப்படிதான் சொல்லுவாங்க) ரொம்ப பிடிச்ச ரெசிபி -ங்கோ !!!

காளானை இந்த முறையில் செய்யும் போது கூடுதல் ருசியாக இருக்கும். மிளகு காரம் உடலுக்கு நல்லது.

தேவையான பொருட்கள்:


எண்ணெய் தேவையான அளவு
கடுகு, உளுந்து, கருவேப்பிலை
பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது - இரண்டு
பச்சை மிளகாய் நறுக்கியது - 1
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
மிளகு தூள் - இரண்டு ஸ்பூன்
காளான் - நறுக்கியது - 250 கிராம்
உப்பு தேவையான அளவு
இந்த செய்முறைக்கு தண்ணீர் தேவை இல்லை

செய்முறை:


கடாயில் நான்கு ஸ்பூன் எண்ணெய் விட்டு காய விடவும். பின்பு கடுகு, உளுந்து, கருவேப்பிலை போட்டு தாளித்து கொள்ளவும்.


பொடியாக நறுக்கிய வெங்காயம் , பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
நறுக்கிய காளான் -ஐ இதோடு சேர்த்து வதக்கவும்.


இரண்டு நிமிடம் கழித்து காளான் நன்றாக தண்ணீர் விடும். இப்பொழுது மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிளறி, மூடி விடவும்.


ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை காளான்-ஐ நன்கு கிளறி விடவும். 15 நிமிடத்தில் தண்ணீர் முற்றிலும் வற்றி விடும்.


இப்போது அடுப்பை அணைத்து விட்டு மிளகு தூளை சேர்த்து நன்கு கிளறி விட்டால் வேலை முடிந்தது !!!! :)

குறிப்பு :
தயிர் சாதம், லெமன் சாதம், சப்பாத்தி இவற்றுடன் மிக நன்றாக இருக்கும்.

4 comments:

Mahi said...

சித்ரா ஆச்சி,பெப்பர் மஷ்ரூம் ரெம்ப சூப்பரா இருக்குதுங்க.:)

/எங்க செட்டியாருக்கு (காரைக்குடி பக்கம் கணவரை இப்படிதான் சொல்லுவாங்க)/ அப்ப உங்களை ஆச்சின்னு கூப்பிடலாம்தானே? ;)

ChitraKrishna said...

மகி, உங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி. இவற்றை படிக்கும் பொது ரொம்ப உற்சாகமா இருக்கு.
நீங்கள் என்னை தாராளமா ஆச்சின்னு கூப்பிடலாம் :)

Unknown said...

நானும் வீட்டில் ரெடி பண்ணி பார்க்கிறேன் சித்ரா ஆண்டி

Unknown said...

நானும் வீட்டில் ரெடி பண்ணி பார்க்கிறேன் சித்ரா ஆண்டி

Related Posts Plugin for WordPress, Blogger...